தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….?

0
541

தொழுது கொண்டிருக்கும் போது கீழாடை கிழிந்து வீட்டால்….?

மாஅத்தாகத் தொழுது கொண்டிருக்கும் போது இமாமுடைய லுங்கி கிழிந்து விட்டது. இமாம் தொழுகையிலேயே ஆடையைச் சரி செய்து விட்டார். தொழுகை முடிந்த பிறகு சிலர் தொழுகை கூடாது என்று கூறினார்கள். குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்கம் தரவும்!

முஜிபுர் ரஹ்மான், எர்ணாகுளம்.

பதில்

ஆடையில் கிழிசல், துவாரம் இருந்தால் தொழுகை கூடாது என்று மத்ஹபுகளில் கூறப்பட்டிருப்பதை வைத்து இவ்வாறு கூறியிருக்கின்றார்கள். ஆனால் ஹதீஸ் அடிப்படையில் அவ்வாறு தொழுதது தாராளமாகக் கூடும்.

صحيح البخاري

362 – حَدَّثَنَا مُسَدَّدٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ سُفْيَانَ، قَالَ: حَدَّثَنِي أَبُو حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ، قَالَ: كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ، كَهَيْئَةِ الصِّبْيَانِ، وَيُقَالُ لِلنِّسَاءِ: «لاَ تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا»

சில ஆண்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய வேட்டியை தங்களுடைய கழுத்திலிருந்தே கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபியவர்கள் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடத்தில் "ஆண்கள் ஸஜ்தாவிலிருந்து எழுந்து அமர்வது வரை நீங்கள் உங்கள் தலைகளை ஸஜ்தாவிலிருந்து உயர்த்த வேண்டாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)

நூல் : புகாரி 362

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஆடைப் பற்றாக்குறையின் காரணமாக நபித்தோழர்கள் ஒரே ஆடையைக் கழுத்திலிருந்து கட்டித் தொழுததால் ஆடையின் கீழ்ப்புறம் உயர்ந்ததை இந்த ஹதீஸ் சுட்டிக் காட்டுகின்றது. இதனால் தொழுகை முறிந்து விடும் என்றெல்லாம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லை.

صحيح البخاري

4302 – حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ عَمْرِو بْنِ سَلَمَةَ، قَالَ: قَالَ لِي أَبُو قِلاَبَةَ: أَلاَ تَلْقَاهُ فَتَسْأَلَهُ؟ قَالَ فَلَقِيتُهُ فَسَأَلْتُهُ فَقَالَ: كُنَّا بِمَاءٍ مَمَرَّ النَّاسِ، وَكَانَ يَمُرُّ بِنَا الرُّكْبَانُ فَنَسْأَلُهُمْ: مَا لِلنَّاسِ، مَا لِلنَّاسِ؟ [ص:151] مَا هَذَا الرَّجُلُ؟ فَيَقُولُونَ: يَزْعُمُ أَنَّ اللَّهَ أَرْسَلَهُ، أَوْحَى إِلَيْهِ، أَوْ: أَوْحَى اللَّهُ بِكَذَا، فَكُنْتُ أَحْفَظُ ذَلِكَ الكَلاَمَ، وَكَأَنَّمَا يُقَرُّ فِي صَدْرِي، وَكَانَتِ العَرَبُ تَلَوَّمُ بِإِسْلاَمِهِمُ الفَتْحَ، فَيَقُولُونَ: اتْرُكُوهُ وَقَوْمَهُ، فَإِنَّهُ إِنْ ظَهَرَ عَلَيْهِمْ فَهُوَ نَبِيٌّ صَادِقٌ، فَلَمَّا كَانَتْ وَقْعَةُ أَهْلِ الفَتْحِ، بَادَرَ كُلُّ قَوْمٍ بِإِسْلاَمِهِمْ، وَبَدَرَ أَبِي قَوْمِي بِإِسْلاَمِهِمْ، فَلَمَّا قَدِمَ قَالَ: جِئْتُكُمْ وَاللَّهِ مِنْ عِنْدِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَقًّا، فَقَالَ: «صَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، وَصَلُّوا صَلاَةَ كَذَا فِي حِينِ كَذَا، فَإِذَا حَضَرَتِ الصَّلاَةُ فَلْيُؤَذِّنْ أَحَدُكُمْ، وَلْيَؤُمَّكُمْ أَكْثَرُكُمْ قُرْآنًا». فَنَظَرُوا فَلَمْ يَكُنْ أَحَدٌ أَكْثَرَ قُرْآنًا مِنِّي، لِمَا كُنْتُ أَتَلَقَّى مِنَ الرُّكْبَانِ، فَقَدَّمُونِي بَيْنَ أَيْدِيهِمْ، وَأَنَا ابْنُ سِتٍّ أَوْ سَبْعِ سِنِينَ، وَكَانَتْ عَلَيَّ بُرْدَةٌ، كُنْتُ إِذَا سَجَدْتُ تَقَلَّصَتْ عَنِّي، فَقَالَتِ امْرَأَةٌ مِنَ الحَيِّ: أَلاَ تُغَطُّوا عَنَّا اسْتَ قَارِئِكُمْ؟ فَاشْتَرَوْا فَقَطَعُوا لِي قَمِيصًا، فَمَا فَرِحْتُ بِشَيْءٍ فَرَحِي بِذَلِكَ القَمِيصِ

மக்கள் என்னைத் தொழுவிப்பதற்காக முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடையவனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் ஸஜ்தாச் செய்யும் போது அது என் முதுகைக் காட்டி வந்தது. ஆகவே அந்தப் பகுதிப் பெண்மணி ஒருவர், "உங்கள் ஓதுவோரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா?'' என்று கேட்டார். ஆகவே அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல் வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை. (சுருக்கம்)

அறிவிப்பவர் : அம்ர் பின் ஸலிமா (ரலி)

நூல் : புகாரி 4302

இந்த ஹதீஸில் இமாமுடைய பின்புறம் தெரிந்தது என்று தெளிவாகவே இடம் பெற்றுள்ளது. எனவே தொழுகையில் ஆடை கிழிந்ததைச் சரிசெய்து விட்டுத் தொழுததில் தவறு இல்லை.

பகிர்

பதிலளி

உங்கள் கருத்துகளை பதிவிடுங்கள்
உங்கள் பெயர்